கோகிலா மகேந்திரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு: தெல்லிப்பளை: சோலைக்குயில் அவைக்காற்றுக் களம், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
vi, 144 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-93-1.
இந்நூலில் வைரஸ் ஒன்றின் வாக்குமூலம் (கோகிலா மகேந்திரன்), சுகமான சுமைகள் (பாகீரதி கணேசதுரை), விழிப்பு (சங்கமித்தா ஜெயக்குமார்), பார்வைகள் (இ.புஷ்பா), நெஞ்சம் துடித்ததடி (பா.சிவதர்சன்), உண்மை உணரப்படும் வரை பொய்தான் (பா.சிவானந்தி), நெருங்கினால் நெருப்பு (சி.பத்சலா), தண்மை (த.சிவகுமாரன்), துளசி வேம்பு (மாலா மதிவதனன்), கிராம லயம் (செல்வநாயகம் கிருஷாந்த்), விலகும் மூட்டம் (வானதி காண்டீபன்), நெருஞ்சி முள் (ராஜி கெங்காதரன்), மனப்பாங்கு (தமிழினி பாலசுந்தரி), ஒத்துணர்வு (கந்தர்மடம் அ.அஜந்தன்), மாயை (பா.திவா), விருட்ச தேவதை (தமயந்தி கணேசானந்தன்), மாற்றம் (கமலா கிருபானந்தன்), உறவுகள் (இ.கருணாலட்சுமி), விடியலைத் தேடி (கௌசீதகி ஜசிதரன்), திருப்பம் (மு.சதீஷ் பாலமுருகன்), வீணை (அ.நளாயினி), வாழ்வும் வாழும் (வாமதேவன் வலவன்) ஆகிய 22 கதைகள் தொகுத்துத்தரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இளம் படைப்பாளிகளுடையவை. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 365ஆவது நூலாக வெளிவந்துள்ளது.