17676 தவனம்: சிறுகதைத் தொகுதி.

மலரன்னை. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

152 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-85-6.

மலரன்னையின் 20 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூலாகும். தவனம், பதர், தளை, தீவினை, நன்னயம், ஒலி இழந்த குரல், மனவோட்டம், அஞ்ஞானம், கொலைவெறி, பிரிவின் எல்லை, இடைவெளி, மறவி, பாத்திரம், சீரிடம், எதிர்மறை, ஏகாந்தம், பந்தம், குறி தவறிய அம்பு, கர்வம் கலைந்தது, தாய்மொழி ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. நேர்கோட்டு கதை கூறல் உத்தியில் அதிக எண்ணிக்கையான கதைகளை இங்கு இனம்காணமுடிகின்றது. புனைவிலக்கியப் புலத்தில் நன்கறியப்பட்டவர் மலரன்னை என்னும் திருமதி அற்புதராணி காசிலிங்கம். 1993இல் எழுத ஆரம்பித்து போராட்டச் சூழலில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை உள்வாங்கி இன்றுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல நாவல்களையும் எமக்கு அளித்துள்ள மூத்த படைப்பாளி இவர். முதிர்ச்சியின் தளர்ச்சி அவரது விழிகளையும் விரல்களையும் தளரவைத்த போதிலும், முன்னெக் காலங்களையும் விடவும் மிகவும் ஓர்மத்தோடு சமூகத்துக்கான தன் செய்தியைப் படைப்பெழுச்சியுடன் இவர் வழங்கிக்கொண்டிருக்கிறார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 361ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72271).

ஏனைய பதிவுகள்

17372 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

மலர் வெளியீட்டுக் குழு. நயினாதீவு: ஆயுள்வேத  வைத்திய கலாநிதி அமரர் தம்பையா மயில்வாகனம் அவர்களின் ஞாபகார்த்த மருத்துவ மலர், 2ஆம் வட்டாரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2009. (யாழ்ப்பாணம்: அன்றா டிஜிட்டல் பிறிண்டேர்ஸ்). 174

Populaire gokkasten: vinnig zij gratis online

Capaciteit Kansberekening: adventures in wonderland slotuitkering Online Gokkasten Vogelgids Fre gokkasten performen Fre gokkasten Cashback-aanbiedingen: Verzacht gij onderuitgaan betreffende zeker percentage va jou inleg achteruit!