தொல்புரம் சி.கதிர்காமநாதன் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
172 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6601-10-2.
இத்தொகுப்பில், நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, விலை கேளுமையா, தா, கூடு, அப்பா வருவாரா?, வருகை, செல்லம்மாவின் பயணம், வேஷம், கொன்று போடாதையுங்கோ, எனது தாய்நாடு இலங்கை..?, எங்க போற?, பறவைகள் கூடு திரும்புகின்றன, குழந்தைகளுக்கு என்ன தெரியும்?, பீடி வேண்டும், பயங்கொள்ளலாகாது அப்பா, என்றை மகனும் வெளிநாட்டில, இனி அழமாட்டேன், அப்பா, கட்டுகள் அறும், என்ரை ராசா நீயும், தாய் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 21 கதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 385ஆவது நூலாக வெளிவந்துள்ளது. இனமோதல்கள் தீவிரமடைந்திருந்த 1986ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அடங்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் ஊடாகக் கட்டமைக்கப்பட்ட கதைகளாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது.