17680 தெளிவத்தை ஜோசப் கதைகள்.

தெளிவத்தை ஜோசப் (மூலம்), மு.நித்தியானந்தன், எச்.எச்.விக்கிரமசிங்க (தொகுப்பாசிரியர்கள்). சென்னை 600 008: கோ.ஒளிவண்ணன், எழிலினி பதிப்பகம், எமரால்ட் பதிப்பகம், 15A, முதல் மாடி, காசா மேஜர் சாலை, எழும்பூர், 1வது பதிப்பு, 2023. (சென்னை: எஸ்.ஆர். என்டர்பிரைஸஸ்).

(28), 445 பக்கம், விலை: இந்திய ரூபா 700., அளவு: 23.5×16 சமீ., ISBN: 978-93-92224-42-3.

தெளிவத்தை ஜோசப் (16.02.1934 – 21.10.2022) இலங்கைத் தமிழ் நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவர். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்று ஏராளமாக எமக்கு வழங்கிச் சென்றவர்;. மலையகத்தில் இருந்து எழுத வந்த முன்னோடிப் படைப்பாளிகளுள் ஒருவர். தெளிவத்தை என்னும் தோட்டத்தில் எழுதுவினைஞராக வேலை செய்த காலகட்டத்தில் எழுதத் தொடங்கியதால் இவர் பெயர் ‘தெளிவத்தை ஜோசப்’ என்றானது. இவர் 2014-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெற்றவர். இவர் தன் வாழ்நாளில் எழுதிய சிறுகதைகளில் தேர்ந்த 59 சிறுகதைகளை இத்தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளனர். மனிதர்கள் நல்லவர்கள், படிப்..பூ!, பொய்மை, மாயை, இது 12ஆவது, விடுதலை, வாழ்வு வந்தால் அனைவரையும், நாமிருக்கும் நாடே, பாட்டி சொன்ன கதை, ஊன்றுகோல், அழகு, அழகு தெரிந்தது, போலித் திருப்தி, துணை, ஏழ்மை, காட்டுப் பூ, அது, பாவசங்கீர்த்தனம், பழம் விழுந்தது, கூனல், பீலி மேலே போகிறது, ஊரான் பிள்ளை, லில்லி, பிராயச்சித்தம், கடைசி வேளை, சிலுவை, மீன்கள், எக்சீமா, கத்தியின்றி ரத்தமின்றி, தீட்டு ரொட்டி, ஒரு தோட்டத்துப் பையன்கள் படம் பார்க்கப் போகிறார்கள், வேறு வழி இல்லை, பயணம், மண்ணைத் தின்று, சோதனை, நானும் அவரும், ஒரு புதிய உயிர், பொட்டு, நினைவுகள், பார்வை, இன்னுமொரு, வேலிகள், அம்மா, பஸ்ஸிலிருந்து, உயிர்ப்பு, பந்து, நாடகம், செத்துப் போகும் தெய்வங்கள், இங்கும் ஒரு மீட்பர், எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், சுவர், உயிர், இருப்பியல், இறுமாப்பு, சாம்பல், மந்திரக்கோல், மழலை, வேடிக்கை மனிதர்கள் அல்லர், ஆஞா ஆகிய தலைப்புகளில் இச்சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Vră-jitoresc Jackpot 2024

Content Păcănele Similare Când Flaming Hot Extreme Gratuit Online Procesul De Pretenţie Superbet Bonus Prep Jucătorii Existenți Rotiri Gratuite Dar Vărsare Pe Casino Joacă Gratuit