கோவிலூர் செல்வராஜன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
xii, 90 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5849-38-3.
மகுடம் பதிப்பகத்தின் 73ஆவது வெளியீடாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இதில் கோவிலூர் செல்வராஜன் எழுதிய நீங்க நல்லா இருக்கணும், கொடுமையை கொடுத்த கொரோனா, அவர்கள் திருந்தவேண்டும், கெட்ட கிருமியே நீ எட்டப் போயிடு, ஐயாயிரம் ரூபா அமுக்கப்பட்டதா?, எப்போது விடியல் வரும்?, காலம் கைகூடுமா?, கொரொனா பெயரில் ஓர் அர்ச்சனை, மானுடக் கடவுளர், நல்லது நடக்கட்டும், மனக் கண்ணில் தெரியும் ஓர் இழப்பு வீடு, என்னத்த சொல்லி என்ன ஆகப்போகிறது, விருப்பப்படி வாழட்டும், எண்ணம் போல் வாழ்க்கை, கொரோனாவை விடக் கொடுமையான வெயில் ஆகிய தலைப்புகளில் இதிலுள்ள 15 கதைகள் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும், உள்ளதை உள்ளபடி சொல்லும் கட்டுரைகளாகவன்றியும், மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி எழுதாமலும், சாதாரணமாக பொழுதுபோக்குக்காக அல்லாமலும் எழுதப்பட்டுள்ள இக்கதைகள், அன்றாட வாழ்வுக்கு அவசியமான உண்மைச் சம்பவங்களை அடியொற்றி கற்பனை கலந்து சுவையாக்கி வழங்கப்பட்டுள்ளன.