17682 நறுக் (சிறுகதைத் தொகுப்பு).

எஸ்.பி.லக்குணா சுஜய். சென்னை 600 078: படி வெளியீடு, எண்: 9, பிளாட் எண்: 1080A, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, மே 2023. (சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல.: 1055டீ, முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு).

112 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ.

‘எல்லாமும் நீ’ என்ற கவிதைத் தொகுதியை முன்னர் வெளியிட்ட எஸ்.பி.லக்குணா சுஜய் தனது இரண்டாவது நூலாக இச்சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கிளிநொச்சி-வட்டக்கச்சியை வாழிடமாகக் கொண்டிருந்தவர். தற்போது தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகின்றார். இவரது கதைகள், நூலின் தலைப்புக்கு ஏற்ப ‘நறுக்’ என்றே அமைகின்றன. சின்னச் சின்ன கதைகளாயினும் வாசகர் மனதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை அவற்றில் உண்டு. சந்திப்போமா?, நறுக், நிறைஞ்ச மனசு, டூ லேட், நட்புக்கு மரியாதை, கல்லறைக் காதலர்கள், நேற்று இன்று நாளை, ஒரு கிளையில் இரு கிளிகள், பசி, காதலாலே, நண்பன், வைராக்கியம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பன்னிரு கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

Arabian Appeal Position

Blogs Finest Gambling enterprise Picks Steeped Wilde and the Book away from Dead Drops & Gains because of the Pragmatic Wager Italian People – 2024-2025

16672 தாலி: சிறுகதைகள்.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 100 பக்கம், விலை: ரூபா