ஆறுமுகம் குகன். நெடுந்தீவு: ஆறுமுகம் குகன், 1வது பதிப்பு, பெப்ரவரி 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
47 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ.
1990களில் நெடுந்தீவு மண்ணை விட்டு இடம்பெயர்ந்து சென்னையில் சிலகாலம் வாழ்ந்திருந்த ஆசிரியர் அங்கு தான் பல ஏமாற்றங்களையும், தோல்விகளையும் சந்தித்ததாகக் கூறுகிறார். இந்நிலை அங்கு தொடர்ந்தமையால் அதிலிருந்து மீண்டு ஜேர்மனியில் சிலகாலம் அகதி வாழ்க்கை வாழ்ந்ததன் பின் இன்று கனடாவில் ஒன்டாரியோ மாநிலத்தில் வுட்பிரிட்ஜ் பகுதியில் வர்த்தகப் பிரமுகராக வாழ்ந்துவருகின்றார். கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவரான இந்தப் படைப்பாளியின் வாழ்க்கைப் பயணத்தில் தனது அனுபவங்கள் கண்ணால் கண்டு காதால் கேட்ட ஒரு சிலவற்றின் ஒட்டுமொத்தமான உருவமே இந்தத் தொகுப்பிலுள்ள எட்டுச் சிறுகதைகளுமாகும். இக்கதைகள் யதார்த்தத்தை எவ்வகையிலும் மறைக்கவில்லை. அதன் காரணம் இக்கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்றும் எமக்குள் வாழ்ந்து வருபவர்களே.