இராஜினிதேவி சிவலிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
88 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-42-9.
இராஜினிதேவி சிவலிங்கம் அவர்களின் ஐந்தாவது நூலாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. தமிழ் ஆசிரியராக, உப அதிபராகக் கடமையாற்றி மாணவர்களை மன்னெற்றம் காணவைத்தஇவர், சிறுகதை, குறுநாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் என இலக்கியத்தின் பல்வகைமைகளிலும் தன் அற்றலை வெளிப்படுத்தி வருபவர். சமதாயத்தில் நடைபெறுகின்ற சீர்கேடுகளையும், அவலங்களையும் தனது கதைகள் வாயிலாக வெளிப்படுத்தி வருபவர். நல்லதொரு சமுதாயத்தைக் கட்டி எழுப்பவேண்டும் என்னும் நோக்கொடு இவர் தனது படைப்பகளை படைத்துவருகின்றார். சண்டியர்களின் மறுபக்கம், வலி சுமந்தவர்கள், காத்திருப்பு, கரைதேடும் படகுகள், நெய்தல் வாடை, நெஞ்சக் கனல், நினைவோடல், கார்த்திகைப் பூ, தூரத்துப் பச்சைகள், அலை பாயும் அரும்பு, கிணறு, உறைந்துபோன உணர்வு, நின்று கொல்லும், நாகம் ஆகிய தலைப்புகளில் இவர் எழுதிய 14 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.