ஆ.தங்கராசா. சுவிட்சர்லாந்து: தாயதி வெளியீடு, சமூக செயலூக்கத்துக்கான முன்னோடி, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).
152 பக்கம், விலை: ரூபா 650, இந்திய ரூபா 220.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-9078-914-1.
தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பினை 2001இல் ‘யுகமொன்று உடைகின்றது’ என்ற தலைப்பில் வெளியிட்ட ஆரையம்பதி ஆ.தங்கராசாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாக 2021இல், 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் வெளிவரும் இந்நூலின் கதைகளில் மட்டக்களப்பில் மறைந்துபோகும் மண்வளச் சொற்கள் அதிகம் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதோடு அடுத்த தலைமுறைக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பின் தனித்துவமான பண்பியல்புகளைக் கொண்டிருந்த ஆரையம்பதி கிராமம், இன்று கண்டுள்ள சமூக மாற்றம் இந்தக் கதைகளினூடாக உலக தரிசனத்திற்கு வெளிப்பட்டு நிற்கின்றது. மண்ணை மீட்போம், உப்புக் கரைச்சை, தொடரும் துயரங்கள், எங்கிருந்தோ வந்தான், தீர்த்தக் கரையினிலே, அது ஒரு அழிவுக்காலம், சிலுவை சுமக்கப் பிறந்தவர்கள், கலியுக அரங்கேற்றம், தேரோட்டம், கொழுந்தொன்று கருகிப்போகிறது, இருள் விலகுக, புதிர், துறைக்காறன், ஆற்றங்கரை பங்களா, ஒட்டிக்கூடு, படிக்கம் ஆகிய 16 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.