மிருசுவில் தமிழ்தாசன். மீசாலை: மிருசுவில் தமிழ்தாசன், மீசாலை கிழக்கு, 1வது பதிப்பு,செப்டெம்பர் 2023. (மீசாலை: சக்தி பதிப்பகம், ஏகாம்பரம் வீதி, மீசாலை கிழக்கு).
96 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூலில் மிருசுவில் தமிழ்தாசன் எழுதிய 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அரகர நமப்பார்பதிபதே!, (ஏ)மாற்றங்கள், ஆழப்பிறந்தவன், தலைத் தீபாவளி, யமனுக்கு இரும்பு கொடுத்தவர், செக்குமாடு, இளைப்பாறா இயந்திரங்கள், யாரிடம் சொல்லி அழ, உப்புத் தின்றவன், பண்பாடுகள் படும் பாடுகள், வினையாகும் விளையாட்டுக்கள், தங்க மகன், கண்கள் திறந்தன, பேசும் தெய்வங்கள், வித்தியாசமானவன் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. 1978 முதல் இன்றுவரை தொடர்ந்து இலக்கியத்துறையில் எழுதிவரும் தமிழ்தாசனின் பத்தாவது நூல் இதுவாகும். இவரது எழுத்தாக்கத்தில் மலர்ந்த நாடகங்கள் சில இணையத் தளங்களின் வழியாகவும் ‘யூரியூப்’ வழியாகவும் மக்களைச் சென்றடைந்துள்ளன. இவரது கலைப்பணிகளாக சிறுவர்களுககான கோலாட்டம், கும்மி, காவடி போன்ற கிராமியக் கலைவடிவங்களை பயிற்றுவித்தும் வருபவர் இவர்.