கமலினி கதிர். சுவிட்சர்லாந்து: திருமதி கமலினி கதிர்காமத்தம்பி, Neunbrunnenstrasse 6, 8050 Zurich, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
141 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-93270-6-1.
மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி கமலினி கதிர்காமத்தம்பி, தற்போது புலம்பெயர்ந்து, சுவிட்சர்லாந்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றார். அவர் அவ்வப்போது எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் நான் வெட்டப்படப்போகிறேன், தத்தளிக்கும் ஓடங்கள், ஒடிக்கப்படும் பட்டாம்பூச்சிகளின் சிறகுகள், வரம் கொடுக்கும் கடவுள்கள், நேசம் மறப்பதில்லை நெஞ்சம், தாய்மை, சில்லென்று ஒரு பாசம், இன்னிசை பாடாத உறவு, அப்பாவின் கடைசி ஆசை, கலைந்த கனவுகளும் தவிக்கும் உள்ளங்களும், புளியமரம் புயலானால், சிறகு விரிக்கும் பறவைகள், மீண்டும் வருமா அந்தப் பொற்காலம், பந்துகள், கொஞ்சம் மாறுவோமா?, விபத்து, நசுங்கிப் போகும் உணர்வுகள், பூக்களின் வண்ணங்கள், என்ரை மகள் கெட்டிக்காரி, தெய்வம் தந்த பூ ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.