அ.முத்துலிங்கம் (மூலம்), மு.இராமநாதன் (தொகுப்பாசிரியர்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 3வது பதிப்பு, ஏப்ரல் 2024, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B..தாசன் வீதி, தேனாம்பேட்டை).
264 பக்கம், விலை: இந்திய ரூபா 330., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-5523-171-0.
அ.முத்துலிங்கத்தின் கதைகளில் சுவாரசியம், எளிமை, நவீனம், அங்கதம் என அனைத்தும் இருக்கின்றன. அவரது கதைப் புலங்கள் இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், சூடான், சோமாலியா, சியாரா லியொன் என்று விரிகின்றன. ஆங்காங்கே புலம்பெயர்ந்தோரின் அலைந்துழல்வும் அடையாளச் சிக்கலும் இருக்கின்றன. அவரது சிறுகதைகளில் தேர்ந்த இருபத்தைந்து கதைகளின் தொகுப்பாக இத் தொகைநூல் அமைகின்றது. ஒட்டகம், மகாராஜாவின் ரயில் வண்டி, நாளை, தொடக்கம், விருந்தாளி, கறுப்பு அணில், ஐந்தாவது கதிரை, தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில், கொழுத்தாடு பிடிப்பேன், அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை, தாழ்ப்பாள்களின் அவசியம், பத்து நாட்கள், புவியீர்ப்புக் கட்டணம், மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள், மயான பராமரிப்பாளர், அமெரிக்கக்காரி, தீர்வு, எல்லாம் வெல்லும், சூனியக்காரியின் தங்கச்சி, பிள்ளை கடத்தல்காரன், நிலம் எனும் நல்லாள், ஆதிப் பண்பு, மண்ணெண்ணெய் கார்க்காரன், கடவுச்சொல், ஆட்டுப்பால் புட்டு ஆகிய தலைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன. இவை ஏற்கெனவே ஆசிரியரின் பல்வேறு சிறுகதைத் தொகுதிகளிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.