17694 பேரீச்சை: சிறுகதைகள்.

அனோஜன் பாலகிருஷ்ணன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 2வது பதிப்பு, ஏப்ரல் 2022, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2021. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B.தாசன் வீதி, தேனாம்பேட்டை).

135 பக்கம், விலை: இந்திய ரூபா 160., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-93-91093-35-8.

‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்துகொண்ட அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி ஆகியோரின் வரிசையில் அனோஜன் பாலகிருஷ்ணனும் இப்போது இணைந்துகொள்கிறார். நவீன வாழ்வின் போக்குகளையும் இத் தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச்செல்கிறார். எழுதக்கூடாத, அதிர்ச்சி தரும் ‘அறங்களையும் விழுமியங்களையும்’ அனோஜன் கதைகளில் காணலாம். காமத்தின் கோணங்களையும் பட்டவர்த்தனமாக எழுதுகிறார். மரபான கதைசொல்லியின் லாவகமும் மொழியும் கொண்ட அனோஜனின் பல சிறுகதைகளில் சாய்வு, போர்வை, யானை, பேரீச்சை, கதிர்ச் சிதைவு, ஆடையுற்ற நிர்வாணம், கர்ப்பப்பை, உதிரம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட எட்டு சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அனோஜன். யுத்தத்தின் முடிவின் பின்னர் ஈழத்து தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர். ‘சதைகள்’, ‘பச்சை நரம்பு’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை ஏற்கெனவே வெளியிட்டவர். ‘அகழ்’ இணைய இதழின் ஆசிரியர்களுள் ஒருவராக இயங்கிவருகின்றார்.

ஏனைய பதிவுகள்