யோர்ச் அருளானந்தம். திருக்கோணமலை: இலக்சுமி பிரசுரம், 91, பாரதி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 யு, திருமலை வீதி).
xx, 101 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98245-5-3.
இந்நூலில் ஜோர்ஜ் அருளானந்தம் எழுதியுள்ள இரண்டாம் நிலவு, சிலுவைகள் சுமக்கும் சீதைகள், புலம்பெயர்ந்தவனின் கனவுகள், குருதட்சணை, மண்ணும் மனிதனும், நாத்திக தோல் போர்த்த தேவதூதர்கள், விடியலுக்காகக் காத்திருக்கிறார்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஏழு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளியான மு.நற்குணதயாளன் அவர்களின் வெளியீடான ‘சிறுகதை மஞ்சரி’ என்ற மாத இதழின் சகோதர வெளியீடாக ‘இலக்சுமி பிரசுராலயம்’ திருக்கோணமலையில் இருந்து இயங்குகின்றது. இவர்களின் நூல் வெளியீட்டுத் தொடரில் ஆறாவது நூலாக ‘மண்ணும் மனிதர்களும்’ வெளிவந்துள்ளது. இந்நூலாசிரியர் யோர்ச் அருளானந்தம், 1991இல் இலங்கையிலிருந்து வெளியேறி தாய்லாந்தில் சில ஆண்டுகள் வாழ்ந்து, பின் 1998இல் நியுசிலாந்துக்குப் புலம்பெயர்ந்தவர். தற்போது அங்கே குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். தான் இலங்கையில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில்-குறிப்பாகத் தன் தாய்மண்ணான உயரப்புலத்தில் வாழ்ந்தபோது பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் பின்னாளில் நியூசிலாந்தில் வாழநேர்ந்த வேளையில் பெற்றுக்கொண்ட சுவையான அனுபவங்களையும் சிறுகதைகளாக நமக்குத் தந்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்துறை இளமாணிப் பட்டதாரியான ஜோர்ஜ் அருளானந்தம், பாங்கொக்கில் உள்ள Asian Institute of Technology யில் தனது முதுமாணிப்பட்டத்தைப் பெற்றவர். நியூசிலாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை அலங்கரித்தவர். நியூசிலாந்து தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கி அதில் இணைப்பாளராகப் பணியாற்றியவர். தமிழ்ச் சமூகத்தில் மட்டுமன்றி நியூசிலாந்தின் பரந்துபட்ட சமூக மட்டத்திலும் பரவலான சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். அதன் காரணமாக 2022இல் Officer of the New Zealand Order of Merit விருதைப் பெற்றவர்.