17697 மரணங்களின் சாட்சியாக: சிறுகதைத் தொகுதி.

கந்தர்மடம் அ.அஜந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

120 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6601-40-9.

இந்நூலில் ஆசிரியர் கந்தர்மடம் அ.அஜந்தன் ‘மனமெனும் கூடு’ என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் ஈழத்து இலக்கியத் துறையில் கால் பதித்தவர். உளவியல் துறையில் மிகுந்த நாட்டமுள்ள இவர் உளவளத்துணையாளராகப் பணியாற்றி வருகிறார். அவர் எழுதிய அடுத்த கட்டப் போர், அதற்கு வெளியே ஒரு வாழ்க்கை, ஒத்துணர்வு, எத்தனை மனிதர்கள், காணாமல் போனோம், மரணங்களின் சாட்சியாக, நான் செய்தது பாவமா?, நிழலாடும் நினைவுகள், நிழல் தேடும் முதுமை, பிஞ்சு மனம், சந்தனக் குச்சிகள், வலி தாண்டிய புன்னகைகள், வள்ளி திருமணம், வெறுப்பும் இருப்பும், விசாலியின் சபதம், காத(ன)ல் ஆகிய 16 கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் களநிலை அலுவலராகப் பணியாற்றிய போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடமையாற்றிப் பெற்ற அனுபவங்களும் அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுடனான தொடர்புகளும் சிறுகதைகளுக்கான பல களங்களைத் திறந்துகொடுத்துள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 408ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Pokerdom 2024 – Онлайн Казино и Покер Рум

Содержимое Игры на любой вкус Бонусы и акции Безопасность и надежность Простой и удобный интерфейс Поддержка 24/7 Мобильная версия Регулярные турниры Pokerdom 2024 – Онлайн