17699 மனுசங்களோடா நீங்கள்: சாதிய உண்மைச் சம்பவக் குறுங்கதைகள்.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

52 பக்கம், விளக்கப்படங்கள்,  விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN-1: 978-624-6601-27-0, ISBN-2: 978-955-4676-27-5.

‘பிற உலக நாட்டு மனிதர்கள் எல்லாம் சிந்தனைகளாலும் கண்டுபிடிப்புகளாலும், செயற்பாட்டுத் திறன்களாலும் உயர்ந்து சாதனையாளர்களாக சென்று கொண்டிருக்கின்ற காலத்தில் நாங்கள் மட்டும் இப்போதும் எங்கும் எதிலும் சாதியை பார்க்கத் துடிக்கும் அற்ப மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அண்மைக் காலத்தில் (2010இற்குப் பின்னர்) ஈழத்தில் நடைபெற்ற உண்மையான சம்பவங்களைக் கொண்டு இக்குறுங்கதைகள் ஆக்கப்பட்டுள்ளன. இதில் வருகின்ற பல மனிதர்கள் சமூகத் தரத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள். அவர்களது மனதில் ஒளிந்திருக்கும் சாதியப் பேய் அடிக்கடி வெளிவருவதை கண்டு அடைந்த கொதிப்பின் விளைவே இக்குறுங்கதைத் தொகுப்பு. இத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் 100 வீதம் உண்மையானவை. சிலரை உங்கள் புரிதல் மூலம் நீங்களே இனங்கண்டு கொள்வீர்கள். தெளிந்த மனதோடு சக மனிதர்களை மதித்து நடப்போம்.’ (க.பரணீதரன், பின்னட்டைக் குறிப்பு). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 405ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Finest Wow Vegas Position Games

Content Gamble Totally free Slots No Obtain Expected 100 percent free Online casino games Without Install Without Registration Fascinating Gameplay And you will Enjoyable Picture