ஸ்ரீலேக்கா பேரின்பகுமார். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
120 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22×14 சமீ., ISBN: 978-624-6601-19-5.
இந்நூலில் சுக்குட்டி, எழுத்தாணி எங்கே எழுதும்?, துருவங்கள், வைத்த கண், உயிர்த் தோழி, நிழற் பாவைகள், பந்தயம், கோடுகள் வர்ணம் பூசுகின்றன, மாசுறு பேறு, நாற்றுமேடை, பொறுக்கியும் திருடர்களும், மானா குத்து கிரிசன், காப்புறுதி, நிலாவின் மடியில், அடையல்கள், உறவும் உயிர்ப்பும், சீதாம்மாவும் பேரனும் ஆகிய 17 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. திருமதி ஸ்ரீலேக்கா பேரின்பகுமார் பன்முக ஆளுமைத்திறன் மிகுந்த படைப்பாளி. நாவல், சிறுகதை, நாடகம், சிறுவர் பாடல், சிறுவர் நாடகம் என இலக்கியத்தின் பல்வகைமைகளிலும் வல்லுநராக விளங்கி வருகின்றார். இவர் கல்வித்துறையில் இணைந்து, ‘நாடகமும் அரங்கவியலும்’ பாடத்தை யாழ்/ஸ்கந்தவரோதயா கல்லூரியில் கற்பித்து வரும் ஆசிரியராகவுமுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 399ஆவது நூலாக வெளிவந்துள்ளது.