17701 மீண்டும் பிறக்கலானேன்: சிறுகதைத் தொகுப்பு.

கமலினி கதிர். சுவிட்சர்லாந்து: திருமதி கமலினி கதிர்காமத்தம்பி, Neunbrunnenstrasse 6, 8050 Zurich, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xii, 241 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978-93-81322-81-9.

இதில் கயமைகளின் நிறம் ஒன்று, ஒயாமல் இசைக்கும் உறவு, அறுந்த பட்டம், கனவாகிப்போன சொந்தம், கலைந்தோடும் மேகங்கள், மீண்டும் பிறக்கலானேன், நினைவுகள் அழிவதில்லை, வாசமான நினைவுகள், தவறுகள் மன்னிக்கப்படலாமா?, வீழ்வேனென்று நினைத்தாயோ?, எது அடையாளம்?, போர்க்கால வடு, பசுமையை நோக்கி, கல்யாணக் கனவுகள், தோழமைக்கு நிழல் கொடுப்போம், துன்பம் நேர்கையில், மூழ்கடிக்கப்படும் ஓடங்கள், அந்த ஒரு நாள், கனவு மெய்ப்பட வேண்டும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்தொன்பது கதைகள் இடம்பெற்றுள்ளன. மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி கமலினி கதிர்காமத்தம்பி, தற்போது புலம்பெயர்ந்து, சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். புகலிட வாழ்வியல் சூழலில் அவர் அவ்வப்போது எழுதிய பத்தொன்பது சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஆசிரியரின் எட்டாவது நூலாக டிசம்பர் 2021இல் வெளியிடத்தயாராகியிருந்த இந்நூல், பல்வேறு தடைகளைத் தாண்டி 2024இல் அவரது ஆசிரியரின் 15ஆவது நூலாக வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான கதைகள் கணவன் மனைவி பிரிவு, விவாகரத்து, இரண்டாம் மூன்றாம் திருமணவாழ்க்கை என்ற சமூக நிகழ்வுகளையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலைகளின் புலம்பெயர் வாழ்வியல் தரிசனங்களையும் காட்சிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்