முல்லைக் கோணேஸ் (இயற்பெயர்: நடராஜா கோணேஸ்வரன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, நவம்பர்; 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
120 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-49-2.
90களில் எழுதத் தொடங்கிய முல்லைக் கோணேசின் முதலாவது சிறுகதைத் தொகுதி ‘நாளை உன் தேசம்’ என்ற தலைப்பில் 1995இலும், இரண்டாவது தொகுதி ‘இரண்டாவது காலம்’ என்ற பெயரில் 2000இலும் வெளிவந்த நிலையில் 24 ஆண்டுகளின் பின்னர் வெளிவரும் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். ஜீவநதி, வெளிச்சம், தீம்புனல் ஆகிய இதழ்களில் இவை முன்னர் வெளிவந்திருந்தன. பனையும் ஈரப்பலாவும், முட்களோடு வாழ்தல், வேட்டைக் கனவு, கல், மோகினிகளின் காலம், அவளும் ஒரு சிறைச்சாலை, இறுதிக் குளியல், மோகத் தீ, பனிமூட்டம், தீப்பிடித்த நினைவோரம் பாயும் ஆறு, துரோகி, தடைகளைத் தாண்டி, மூன்று கணபதிகளின் கதை, தூரத்து வெளிச்சம் ஆகிய 14 தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 425ஆவது நூலாக வெளிவந்துள்ளது.