ஷோபாசக்தி (இயற்பெயர்: அன்ரனிதாசன்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
264 பக்கம், விலை: இந்திய ரூபா 250.00, அளவு: 20.5×13 சமீ.
இந்நூலில் ஷோபாசக்தி 2015-2020 காலகட்டத்தில் எழுதிய பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை மிக உள்ளக விசாரணை, ராணி மஹால், காயா, யாப்பாணச் சாமி, மூமின், அம்மணப் பூங்கா, யானைக் கதை, அந்திக் கிறீஸ்து, பிரபஞ்ச நூல், அரம்பை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. தற்போது புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் ஷோபாசக்தி ஈழத்தின் அல்லைப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இலக்கியப் புனைவு, அரசியல் விமர்சனம், பதிப்பு, நாடகம், திரைப்படம், நடிப்பு ஆகிய துறைகளில் வெற்றிகரமாக இயங்குகின்றார்.