17706 மௌனத்தின் சலனம்.

சிவ.ஆரூரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 106 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-61-1.

இத்தொகுப்பில் சிவ.ஆரூரன் எழுதிய 16 சிறுகதைகள் உள்ளடங்குகின்றன. மனிதாபிமானம், மனித மனத்தின் தளம்பல்களும் எதிர்பார்ப்புகளும், நடத்தைப் பிறழ்வுகள் எனப் பல்வேறு கருப்பொருள்களை உள்ளடக்கிய கதைகள் இவை. மௌனத்தின் சலனம், அகாலச் சாவு, வாழ்வின் கணக்குகள், தவிப்பு, மனிதன், கனவுக் கன்னி, பிறந்த நாள், வித்தியாசம், மாண்பிழந்த காப்பு, நான் யார், புதிய மரியாதை, மாய எழுச்சி, விபரீத புத்தி, ஆளுக்கொரு நீதி, மன ஓசை, அழிந்த கோலம் ஆகிய தலைப்புகளில் இவை வெளிவந்துள்ளன. 2008 மார்ச் 24ஆம் நாள் கைதுசெய்யப்பட்டு, பதினான்கு ஆண்டுகளாக வெளியுலகம் காணாது அரசியல் கைதியாகச் சிறையிலிருக்கும் சிவ.ஆரூரனின் கதைகள் 2008ஆம் ஆண்டுக்கு முற்பட்ட கதைக்களங்களைக் கொண்டவை. ஆசிரியரின் முதலாவது சிறுகதைத் தொகுதி ஜீவநதி வெளியீடாக ‘பூமாஞ்சோலை’ என்ற தலைப்பில் 2018இல் வெளிவந்தது. ‘மௌனத்தின் சலனம்’ இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகும். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 241ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Amuser un brin gratuite

Ravi Evolve Salle de jeu | Casino action Pas de bonus de dépôt Prince Ali Salle de jeu Puis-je mettre le divertissement du trêve ?