17707 யதார்த்தம்: ஒவ்வொரு காயத்திற்கும் ஓர் கதையுண்டு.

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம். கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

(6), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

பெண்களுக்கெதிரான வன்முறையைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த 16 நாள் செயற்பாட்டின் ஓர் அம்சமாக பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற எட்டுச் சிறுகதைகளை இங்கே தொகுத்து வெளியிட்டுள்ளனர். தமிழ்க் கதைகளை சிங்கள மொழிபெயர்ப்புடனும் சிங்களக் கதைகளை தமிழ் மொழிபெயர்ப்புடனும் வெளியிட்டுள்ளமையின் மூலம் எமது சமுதாயத்தில் தமிழ் சிங்களம் என்ற வேறுபாடின்றி, அனைத்துப் பெண்களுக்கும் பொதுவான பெண்களுக்கெதிரான வன்முறை பற்றி இரு சாராரிடமும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் ஓர் கருவியாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலில் ‘பாவா உனக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்’(எரீனா மென்டிஸ்), ‘அமைதியான கண்ணீர்’ (கே.பி.சந்தலி நவோதயா மதுராங்கி), ‘ஒரு குழந்தையின் கதை’ (தரிந்து அனுராதா), ‘தொல்லையான கணவன்’ (பத்திரண சஷிணி இரோஷினி), ‘பொம்மை’ (வி.மைக்கல் கொலின்), ‘அறியாமையில் சிக்கிய அன்னவளின் கணம்’ (ஏ.ஆர்.எஸ்.அஸ்லா), ‘எப்போது மாறும்?’ (பு.திவ்யதர்ஷினி), ‘ஊமைக் காயங்கள்’ (எம்.ஏ.எப். இல்மா) ஆகிய எட்டுக் கதைகள் தமிழிலும் சிங்களத்திலும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்