சந்திரவதனா செல்வகுமாரன். ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg 29, 74523 Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, நவம்பர் 2024. (ஜேர்மனி: Stuttgart).
52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
‘வாழ்வில் யார் யாரை எந்தெந்தப் பொழுதுகளில் சந்திக்கப் போகிறோம் என்;பதையோ அவர்களில் யார் யார் எமக்குப் பிடித்தமானவர்களாகி விடப் போகிறார்கள் என்பதையோ எம்மில் யாருமே முற்கூட்டியே அறிந்து வைத்திருப்பதில்லை. ஏன், எதற்கு, எப்படி என்று தெரியாமலே நாம் சந்திப்பவர்களில் சிலர் மட்டும் எம் நெஞ்சங்களில் பிரத்தியேகமான இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். அப்படித்தான் இவர்களில் சிலர் என்னுள் குடிபுகுந்து என் மன முகட்டில் அமர்ந்திருக்கிறார்கள்’ என்கிறார் இந்நூலாசிரியர். இத்தொகுப்பில் அவன், இரயில் பயணங்களில், தடம் பதித்தவர்கள், இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும், காதல் ஒரு போர் போன்றது, காதலினால் அல்ல, யார் மனதில் யார் இருப்பார், உன்னைக் கண்டு நானாட ஆகிய தலைப்களில் சந்திரவதனா செல்வகுமாரனால் எழுதப்பட்ட எட்டுச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.