செங்கதிரோன் (இயற்பெயர்: த.கோபாலகிருஷ்ணன்). மட்டக்களப்பு: செங்கதிர் இலக்கிய வட்டம், 607, பார் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (மட்டக்களப்பு: காந்தள் அச்சகம், புதுக்குடியிருப்பு).
80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-931-370-5.
குடை கவனம், ஊர் மானம், கூடு விட்டு, கரப்பத்தான் பூச்சி, ஒரு குழந்தையின் அழுகை, அங்கிருந்து வந்தவர்கள், துரோகி, துறவு, அந்த ஏவறைச் சத்தம், சகோதரத்துவம், ராஸ்கல்ஸ், லயன், யாவும் கற்பனையல்ல ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 13 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாணத்து அனுபவம் மிக்க தமிழ்ப் படைப்பாளியான செங்கதிரோன், சமூகப் பொறுப்புடன் பிரச்சினைகளை அணுகித் தீர்வோடு கதைசொல்லும் திறன் மிக்கவர். சமூக, போராட்ட, அரசியல் சார்ந்த முக்கியமான விடயங்கள் சிலவற்றைத் துணிவுடன் ஆரோக்கியமான விமர்சனக் கண்ணோட்டத்துடன் இத்தொகுப்பில் சிறுகதைகளாகத் தந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72188).