டானியல் ஜெயந்தன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
191 பக்கம், விலை: இந்திய ரூபா 220.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-95256-06-3.
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் பிறந்த நூலாசிரியர், முன்னர் இலங்கையில் ‘சமர்’ சஞ்சிகையை நடத்திவந்த எழுத்தாளர் டானியல் அன்ரனியின் மகனாவார். தந்தையின் அடியொற்றி எழுதத் தொடங்கிய டானியல் ஜெயந்தனின் முதல் சிறுகதை ‘காலம்’ இதழில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இணைய, அச்சு இதழ்களில் தனது படைப்பாக்கங்களை வெளிவரச்செய்தார். தான் பிறந்த நாவாந்துறையின் கடற்கரைச் சூழலும், போரினால் இடம்பெயர்ந்து வாழ்ந்த மன்னாரின் கடலும், பின்னாளில் பணிபுரியச் சென்ற கட்டாரின் டோஹாவும், தற்போது வசிக்கும் பிரான்ஸ் நாடும் ஜெயந்தனின் கதைகளில் ஊடும் பாவுமான அனுபவச் சேகரங்களாகப் பதிவாகின்றன. இச்சிறுகதைத் தொகுதியில் இவரது தேர்ந்த கதைகளான மல்கோவா, கடவுள் இல்லாத இடம், புறாக்கூடு, குற்ற விசாரணை, சனையா இருபத்தியெட்டு, லெப்டினன்ட் கேர்ணல் ராபட் கொன்சர்லஸ், முற்பணம், கொடித்துவக்கு, சிலுவைப் பாதை, வயல்மாதா ஆகியவை இடம்பெற்றுள்ளன.