தொல்புரம் சி.கதிர்காமநாதன் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
140 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-81-8.
07.09.1959இல் பிறந்த சி.கதிர்காமநாதன் 20.01.1985-இல் ஈழநாடு பத்திரிகையில் எழுதிய ‘எங்கள் வட்டத்தின் உள்ளே’ என்ற கதைமூலம் எழுத்துலகில் தடம் பதித்தவர். இயல்பாகக் கதை சொல்லும் எளிமையான முறையொன்றைத் தனது முறைமையாக வரித்துக்கொண்டவர். அந்த எளிமையான முறைமைக்குள் எள்ளலும் நகைச்சுவையும் குறியீட்டுத் தன்மைகளும் பொதிந்து கிடக்கும். இந்நூலில் தொல்புரம் சி.கதிர்காமநாதன் 1999 முதல் 2012 வரை எழுதிய கதைகளுள் முகாம், ஒரு கிராமத்து இரவு, இரண்டு மனிதர்கள், என்ன தரப்போறியள், அம்மா நான் விளையாட, மகா ஜனங்களே, பாவம் அது என்ன செய்யும், ஒரு நாள், விடைபெறுதல், வீடு, கண்ணம்மாவும் செல்வாள், என்ரை பிள்ளையள் எங்க?, எங்கட அக்காவும் அழுவாளா?, செத்துப்போன, வால், இனம், வலையில் படும் வெளவால்கள் ஆகிய 17 கதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 360ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72275).