திக்குவல்லை ஸப்வான். கொழும்பு 9: ரீட் மோர் (சுநயன அழசந) பப்ளிக்கேஷன், 82, ஸ்ரீ வஜிரானந்த மாவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (கொழும்பு: I.P.C.Printers).
xi, 219 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 550., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-5064-46-5.
வகுப்பறையில் ஒரு வாதம் நடைபெறுகிறது, இயந்திரமாகிப் போன இதயங்கள், கோணலாய் தெரியும் கோபுரங்கள், குறிஞ்சி மலர்களும் நெருஞ்சி முட்களும், முதலாளி ஹஜ்ஜுக்குப் போகிறார், நிழல்கள் நிஜங்களல்ல, கண்கள் திறந்தன, விலைபோகாத சித்திரங்கள், புழுதிப் பூக்கள், கசப்பாகும் கறிவேப்பிலைகள், அவனும் மனிதன் தான், ஒரு கணவன்-ஒரு மனைவி-ஒரு குழந்தை, பிச்சைக்காரர்கள், நட்சத்திரங்களை விழுங்கும் மேகங்கள், வாப்பாவுக்கு ஒரு சால்வை, ஜசா தாத்தா, பழம் தேடும் பட்சிகள், தடைகளைத் தாண்டும் நடைகள், விடிவில் ஒரு முடிவு, மனப் புற்று, அவர்களுக்கும் பெருநாள், வித்தியாசமான(ண)வர்கள், சுனாமியும் ராலஹாமியும், பலாமகன், அணைந்துபோன அடுப்பு, நெருப்புச் சங்கிலி, நஞ்சு மனம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 27 சிறுகதைகளை இந்நூல் கொண்டுள்ளது. தனது முதலாவது கவிதையை 1970இல் தினபதி பத்திரிகையில் பிரசுரமாகக்கண்டவர் திக்குவல்லை ஸப்வான். தென்மாகாணத்தில் வெலிகம- திக்குவல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், இனிமை, கவிமஞ்சரி ஆகிய இலக்கிய சஞ்சிகைகளின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். பின்னாளில் கிராம அதிகாரியாகவும் கடமையாற்றியவர். இவர் கல்வியியல் நூல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி ‘உம்மாவுக்கு ஒரு சேலை’ என்ற தலைப்பில் 1998இல் வெளிவந்தது. ‘ஒரே இரத்தம்’ என்ற மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பு 2007இல் கொழும்பு மீரா பதிப்பகத்தின் 73ஆவது பிரசுரமாக வெளிவந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71446).