17716 விடியல்: சிறுகதைத் தொகுப்பு.

சியாமளா யோகேஸ்வரன். யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

131 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-6567-01-9.

இதயராகம்-நாவல், கானல்நீர்-நாவல் ஆகியவற்றைத் தொடர்ந்து ‘எங்கட புத்தகங்கள் வெளியீட்டகம்’ வெளியிடும் திருமதி சியாமளா யோகேஸ்வரனின் மூன்றாவது நூல் இது. இந்நூலில் நதிகளின் பாதையில், மனிதம் இன்னமும் மரணிக்கவில்லை, மயக்கமென்ன,  அறுவடைகள், மனச்சாட்சி பேசினால், வடுக்கள், எம் வீட்டுக் கறுப்பழகி, வரமொன்று தாராயோ?, தலையணைக் கனவுகள், விடியலின் வடிவம், பாசமலர்கள், விடியலைத் தேடி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு வகைப்பட்ட குடும்பங்களுக்குள் வாழ்கின்ற பல்வேறுபட்ட மனிதர்கள், அவர்களின் மாறுபட்ட குணாம்சங்கள், அதனால் பாதிக்கப்படும் ஏனையவர்கள் என ஆசிரியரின் ஆழ்ந்த பார்வையில் சிக்கிய சில வாழ்வியல் கோலங்களை வாசகருருக்கு இக்கதைகளின் வழியாகக் காட்சிப்படுத்துகின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடப் பட்டதாரியான சியாமளா, அவுஸ்திரேலியாவில் ‘லக்டாலிஸ்’ (Lactalis Australia) பால் தயாரிப்பு நிறுவனத்தில், தர நிர்ணயக் கட்டுப்பாட்டுப் பரிசோதகராகப் பணிபுரிந்து வருகிறார். வார இறுதி நாட்களில் தமிழ்ப் பள்ளி ஆசிரியராகவும் சேவையாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

On the internet

Posts Exactly what Casinos Give 30, 40, fifty, sixty, 70, 80 Lb Bonus? Deposit ten Play with 70 Gambling establishment Playojo How C20 Deposit Casino