17717 வெற்றிச்செல்வியின் சிறுகதைகள்.

வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

294 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-624-94650-9-1.

மக்கள் புரிந்துகொள்ளவும் மறக்காமல் இருக்கவும் வேண்டிய நமது போராட்ட வரலாற்றை, சமூக சித்தாந்தத்தை நெறி தவறாது எடுத்துரைக்கும் முப்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. உளவியல், நகைச்சுவை, சமூகம், கற்பனை, கனவுகள், புரட்சி எனப் பல வடிவங்களில் கதைகளைப் படைத்திருக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டவனின் மனைவி, குங்கும கேள்வி, எதிர்பார்ப்பு, முடியாத ஏக்கங்கள், மூர்த்திக்கு நல்ல மனசு, முரண், சணல்-4, மனிதம் மரணிக்காது, மனிதமிருக்கிறது, சிங்கிடி, சித்திரவதை, ஜன்னல் கனவுகள், சலோனி, அம்மாவின் பிரச்சினை, அவளின் பிரச்சினை, ஆறாத காயம், பேஸ்புக் சட், மீளுகை, ஈரம், நதி, பெண் வாழ்வு, கரைய மறுக்கும் கணங்கள், செல்வம் இழந்த கதை, வானதியின் தோட்டம், புழு தின்னும் செடிகள், மைனாவே மைனாவே மழை வருமா?, வாழவைக்கும் நினைவுகள், புதைகுழி மனிதர்கள், சிறை, இயலுமை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இக்கதைகள் எளிய மொழி நடையில் தேவையற்ற புனைவோ பொய்யான புலம்பல்களோ இல்லாமல் கூர்மையான பார்வையுடன் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

‎‎las vegas Antique 777 Gambling enterprise Ports On the Application Shop/h1>