ரஜிதா அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: முத்தமிழ்ச் சங்கம், 110, புதிய செங்குந்தா வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, மே 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).
124 பக்கம், விலை: ரூபா 420., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-98909-5-4.
இந்நூலில் மங்கம்மாவின் நீதி, நிம்மதி பெருமூச்சு, சேர்க்கை, கலியுக ராமன், வேலியே பயிரை மேய்ந்தது, பிள்ளை வரம், அந்த நிமிடம், எல்லாம் ஊழே, கடமையுணர்ச்சி, வாழ்க்கை, பாவம், வாடகை, அலேட், சிறுபிள்ளை வேளாண்மை, கண்ணாடி வீடு ஆகிய 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. போரினால் சிதைவுற்ற மண்ணில் அலைவுறும் வாழ்க்கைக்கு இடையிலும் மனம் தளராமல் நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ளும் எளிய மக்களின் வாழ்வை அவர்களது சிக்கன மொழியினூடாக இரத்தமும் சதையுமாக இக்கதைகளில் பதிவுசெய்திருக்கிறார். குடும்பம் என்னும் கட்டமைப்பினுள் பெண்கள் பலிக்கடாவாக்கப்பட்டு வருவதையும் ஆங்காங்கே தனது எழுத்துக்களின் வழியாக பதிவுசெய்கின்றார்.