க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
40 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 196ஆவது இதழாக 20.03.2023இல் வெளிவந்த ஈழத்துச் சாதியச் சிறுகதைகளின் சிறப்பிதழில் ஆற்றல் மிகு கரத்தில் (கே.டானியல்), அசல் யாழ்ப்பாணத்து மனிதன் (தெணியான்), ஒரு நாய்ப்பயல் (யோ.பெனடிக்ட் பாலன்), நிலவிலே பேசுவோம் (என்.கே.ரகுநாதன்), ஒற்றைப் பனை (புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்), கண்ணி (அ.தேவதாசன்), வைராக்கியம் (மு.அநாதரட்சகன்), அகதி அந்தஸ்து (இ.இராஜேஸ்கண்ணன்), உயிரிலும் மேலானது (க.பரணீதரன்), வேறையாக்கள் (அனோஜன் பாலகிருஷ்ணன்) ஆகிய சிறுகதைகளும், இன்பமகன் எழுதிய ‘ஈழத்து சாதிய இலக்கியத்தின் இன்றைய நிலை’ என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. ஈழத்தில் சாதியப் பிரச்சினைகள் எவ்வாறு வடிவ மாற்றம் பெற்று இன்றும் அரங்கேறி வருகின்றன என்பதற்கு இவ்விதழில் உள்ள கதைகள் எடுத்துக்காட்டாக உள்ளன.
 
				