17720 தங்கத் திருமேனி: சிங்களச் சிறுகதைகள்-தேவேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை முனைவரை இலக்கியப் பாலமொன்று.

லறீனா அப்துல் ஹக் (தமிழாக்கம்). கொழும்பு 7: தேசிய நூலக அவணவாக்கல் சேவைகள் சபை, இல.14, சுதந்திர மாவத்தை, 1வது பதிப்பு, 2022. (மாலபே: சரசவி வெளியீட்டகம், 601, அத்துருகிரிய வீதி).

181 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5747-04-7.

இந்நூலில் கறுப்பு வெள்ளையல்ல (ஜயதிலக்க கம்மெல்லவீர), மனித வட்டம் (எரிக் இளையப்ப ஆரச்சி), குளிர்ந்த கரங்கள் (கீர்த்தி வெலிசரகே), ஒரு கவிஞனைத் தேடி (லியனகே அமரகீர்த்தி), மீண்டேன் மீண்டேன் சிறப்புற மீண்டேன் (சுமுது நிராகீ செனெவிரத்ன), சண்டைச் சேவல் (நிஸ்ஸங்க விஜயமான்ன), தங்கத் திருமேனி (ப்ரபாத் ஜயசிங்ஹ) ஆகிய ஏழு சிங்களச் சிறுகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இது  தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சபையின் வேலைத்திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஏழு சிறுகதைகளைத் தமிழ் மொழியிலும், தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஏழு சிறுகதைகளை சிங்கள மொழியிலும் மொழிமாற்றம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பெற்றது. ஆலோசனைக் குழுவொன்றும் இச்செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தவென நியமிக்கப்பட்டது. அக்குழுவில் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட, பேராசிரியர் கே.என்.ஓ. தர்மதாச, கலாநிதி சுனில் விஜே சிறிவர்த்தன, இலக்கியவாதி புத்ததாச கலப்பத்தி, பேராசிரியர் எஸ்.ஜே.யோகராசா, திரு. சிவகுருநாதன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவ்வடிப்படையில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மொழிகள்துறை விரிவுரையாளர் லறீனா அப்துல் ஹக் அவர்களால் சிங்களக் கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறே ஹேமச்சந்திர பத்திரன அவர்களால் ஏழு தமிழ்க் கதைகள் சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சமகாலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71447).

மேலும் பார்க்க:

யதார்த்தம்: ஒவ்வொரு காயத்திற்கும் ஓர் கதையுண்டு. 17707

ஏனைய பதிவுகள்