ஆசி கந்தராஜா (இயற்பெயர்: ஆறுமுகம் சின்னத்தம்பி கந்தராஜா). யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906ஃ23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).
xxxiii, 148 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 950., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-624-97823-6-5.
‘கிழக்கு பேர்ளின் இறங்குதுறையைப் பாவித்து மேற்கு பேர்ளினூடாக பூமிப்பந்தெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு பிளவுபட்ட ஜேர்மனியின் பூகோள அமைப்போ அல்லது தங்கள் நுழைவுக்கு வசதி செய்த ‘பொட்ஸ்டம்’ உடன்படிக்கை பற்றியோ, இன்றுவரை தெரியாதிருக்கலாம். இந்த வரலாற்றுத் தகவல்கள் தமிழ்மொழியில் பதியப்படாதவை. இதனை மனங்கொண்டே இவ்வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டது. நாவலில் வரும் பல சம்பவங்களுக்கு நான் நேரடி சாட்சியாக இருந்துள்ளேன். நாவலில் சொல்லப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் புனைவு கலந்து கதைமாந்தர்கள் ஊடாகச் சொல்லப்பட்டிருக்கின்றன’. (நூலாசிரியர் உரையில்).