17728 அன்பார்ந்த தமிழீழ மக்களே.

ச.இராகவன். தமிழ்நாடு 607002: இலக்கிய படைப்புக் குழுமம், படைப்பு பதிப்பகம், இல.8, மதுரைவீரன் நகர், கூத்தப்பாக்கம், கடலூர், 1வது பதிப்பு, 2023. (தமிழ்நாடு: படைப்பு பதிப்பகம், இல.8, மதுரைவீரன் நகர், கூத்தப்பாக்கம், கடலூர்).

112 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-93-90913-97-8.

‘அன்பார்ந்த தமிழீழ மக்களே’ போருக்குப் பின்னரான கதைப்புலத்தில் நின்று பயணிக்கின்றது. போர் வன்முறையின் ஆறாத் தழும்புகளை இரத்தமும் சதையுமாக வைக்கும் இக்கதை ‘நொன் லீனியர்’ வகை எழுத்தில் வெறு பல உட்கதைகளின் மடிப்புகளுடன் இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. (பொதுவாக ஒரு கதை என்பதில் ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரு தொடர்ச்சியுடன் எழுதப்பட்டு இருக்கும். NonLinear வகையில் அப்படி எழுதாமல் இணைப்பில்லாமல் துண்டு துண்டுகளாக காலத்தின் தொடர்ச்சி இல்லாமல் நடந்த நிகழ்ச்சிகளையோ அல்லது இரண்டு தனித்தனி கதை மூலங்களை பற்றியோ எழுதப்படும்). இந்நாவல் ஒரு அப்பாவி இனக்குழுவின் மீதுகட்டவிழ்த்து விடப்பட்ட இந்த நூற்றாண்டின் மாபெரும் வன்முறையை மிகப்பெரும் ஆவணமாககையளித்துள்ளது.  ச.இராகவன், யாழ்ப்பாண மாவட்டத்தில் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வணிகமுகாமைத்துவப் பட்டதாரி. 90களில் அறிமுகமான ஈழத்துப் படைப்பாளி. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 120183).

ஏனைய பதிவுகள்

12069 – சைவ போதினி-மூன்றாம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 9வது பதிப்பு, ஜனவரி 1975, 1வது பதிப்பு, 1967, 2வது பதிப்பு, 1968, 3வது பதிப்பு, 1969, 4வது பதிப்பு, 1970,