எம்.டி.எம்.இம்தியாஸ். தர்காநகர்: ஐ.எல்.எம்.தமீம், 182, டவர் வியூ, 1வது பதிப்பு, ஜுலை 1981. (கொழும்பு 10: ருகுணு பிரிண்டர்ஸ், 40/4, மாளிகாவத்தை வீதி).
viii, (6), 102 பக்கம், விலை: ரூபா 12.00, அளவு: 21.5×14.5 சமீ.
இஸ்லாமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 28 அத்தியாயங்களில் எழுதப்பட்ட மண்மணம் கமழும் நாவல். இஸ்லாமியப் பண்பாட்டால் தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொண்ட இரு குடும்பங்களின் கதாபாத்திரங்களான சபீலா உம்மா, ஹூஸைன், மியந்தா, ஹனீதா ஆகியோர் தங்களுக்குள் எழுந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு கண்டார்கள் என்ற அடிப்படைத் தத்துவார்த்தத்தை மையக் கருத்தாகக் கொண்டு எழுந்ததே இந்நாவல். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 91027).