17735 இணையிலான்: வரலாற்று நாவல் (முதலாம் பாகம்).

இணுவிலான் சிகாகோ பாஸ்கர். சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (சென்னை 600093: பூவரசி பதிப்பகம், இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம்).

448 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5018-03-1.

இணுவிலான், சிகாகோ பாஸ்கர் எனப் பல புனைபெயர்களால் அறியப்பெற்ற சண்முகபாஸ்கரன், யாழ்ப்பாணத்தின், இணுவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ பெருநகரில் வாழ்ந்து வருகிறார். இலங்கை வரலாற்றோடு பின்னிப் பிணைந்த வகையில் அவர் எழுதியுள்ள இவ்வரலாற்று நாவலின் முதலாம் பாகம், இலங்கையின் வரலாற்றில் 1508 முதல் 1698 வரை ஆக்கிரமித்து ஆட்சிபுரிந்த போர்த்துக்கீசர் வரலாற்றுக் காலத்தின் பகைப்புலத்தில் நகர்கின்றது. அக்காலத்திற்கு முன்னர் வாழ்ந்த ஈழமன்னர்களின் வரலாற்றுக் குறிப்புகளையும், ஆங்காங்கே பொதிந்து வைத்து சுவாரஸ்யமான நாவலாக உருவாக்கியிருக்கிறார். ‘மிகக் கச்சிதமாக இணையிலானை ‘தலைவருடைய’ சாயலிலும் அவர் வரலாற்றுத் தலைவன் எனவும், வாழ்விலும் சாவிலும் கூட இணைத்து விட்டிருக்கின்றமை எழுத்தாளரின் அதீத பற்றுதலும் ஈடுபாடுமே’ என இந்நூலின் பதிப்பாளரான ஈழவாணி குறிப்பிட்டுள்ளமையும் கவனத்திற்குரியது.

ஏனைய பதிவுகள்

Mermaids Hundreds of thousands Slot Games

Posts Online Mermaids Millions Position Video game Current Local casino Extra Requirements What is the Most significant Winnings On Mermaids Hundreds of thousands? In reality,