மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
146 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 19×13 சமீ., ISBN: 978-624-5849-34-5.
மகுடம் பதிப்பகத்தின் 72ஆவது வெளியீடாக இந்நெடுங்கதை வெளிவந்துள்ளது. முன்னர் 2021இல் 48ஆவது மகுடம் வெளியீடாக இந்நாவலின் முதற் பாகம் வெளிவந்திருந்தது. முப்பது வருட காலத்திற்கு மேலாகத் தொடர்ந்த தமிழீழ விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் எழுந்த நாவலாக போராட்ட காலத்தில் இரத்தமும் சதையுமாக வாழ்ந்த மாந்தர்களின் கதையாக ’இதிகா’ காணப்படுகின்றது.