ஏ.எம்.சாஜித் அஹமட். அக்கரைப்பற்று-2: பெருவெளி பதிப்பகம், 78/1, உடையார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (அக்கரைப்பற்று 2: சிற்றி பொயின்ட் பிரின்டர்ஸ், உடையார் வீதி).
viii, 56 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42877-1-6.
புத்தன் பற்றிய விரிவானதொரு அனுபவக் கிளர்ச்சியை இந்நாவல் தருகின்றது. சரித்திரக் காதையில் புத்தரை நம்பிய பெரும்பான்மை இன உணர்வு, இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் வாழ்வியல் இருப்பை கேள்விக்குள்ளாக்குவதை குறியீட்டு மொழியில் அறிமுகம் செய்கிறார். முற்றிலும் விசித்திரமான புத்தனும் அவனது தத்துவ விசாரங்களும் இந்நாவலின் உட்பொருள்களாகத் தொனிக்கின்றன. புத்தனின் அரசியலும் அரசியலில் புத்தனும் மாறிமாறி மாயாஜாலம் காட்டும் புதிராக நாவல் விரிகின்றது. ஏ.எம்.சாஜித் அஹமட் கிழக்கிலங்கை அக்கரைப்பற்றில் 1990இல் பிறந்தவர். அக்கரைப்பற்று மாநகரசபையில் உத்தியோகத்தராகப் பணியாற்றும் இவர் ஒரு குறும்பட இயக்குநருமாவார். பெருவெளி இதழ்களில் இவரது கதைகளும் கவிதைகளும் பிரசுரமாகியுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 121255).