17740 இயற்கை.

ரோசி கஜன். சென்னை 61: ஸ்ரீ பதிப்பகம், புதிய எண். 17, பழைய எண் 16, ஸ்டேட் பாங்க் காலனி விரிவு, 2வது பிரதான சாலை, நங்கநல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2021. (சென்னை: வேதா என்டர்பிரைசஸ்).

576 பக்கம், விலை: இந்திய ரூபா 540., அளவு: 18×12.5 சமீ.

எழுத்தாளர் ரோசி கஜனின் படைப்புலகம் இயல்பானது. பாவனைகள் அற்ற மொழிநடையும் எளிமையான விவரணச் சித்திரிப்பும் கொண்டது. இலகுவான இலங்கைத் தமிழில் புலம்பெயர் தமிழரின் வாழ்க்கையைச் சொல்லும் இவரது ஆக்கங்களில் நிதானமும் பொறுமையும் குடும்பச் சூழலை அனுசரித்து நடக்கும் மனிதர்களுமே கதாமாந்தர்கள். எதார்த்தமான குடும்பச் சிக்கல்களும் உணர்வுச் சிதறல்களுமே இவரது படைப்புலக ஆடுகளம். இயற்கையின் வழியாக மென்மையானதோர் காதல் கதையை வட அமெரிக்காவின் சாலை வழி பயணிக்கும் சுழயன வுசைி வாயிலாக பயணவழிப் புதினமாக (Travelogue) விபரித்திருக்கிறார். கனடாவின் Lac &Cayamant இலிருந்து புறப்பட்டு அமெரிக்காவின் நயாகரா வழியே டொரன்ரோவிலிருந்து மேற்குக் கோடியில் உள்ள சான் பிரான்சிஸ்கோ வரை கிழக்கு மேற்காக நீளும் இந்நாவல் ஒரு பயணக்கட்டுரையின் சாயலுடன் அன்பால் இணைந்ததோர் குடும்பத்தின் கதையையும் சுவைபடச் சொல்கின்றது.

ஏனைய பதிவுகள்