முல்லைக் கமல் (இயற்பெயர்: சிவராசா கமலேஸ்வரன்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 2வது பதிப்பு, பங்குனி 2024, 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
125 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-68-9.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது, தந்தையைப் பதுங்குகுழிக்குள் விட்டுவிட்டு வெளியேறிய ஒரு இளைஞனின் உணர்வாக விரியும் கதையில், எங்கள் மண்ணில் இலங்கை அரசு நிகழ்ந்திய இன அழிப்பும் அதன்போது வன்னிமக்கள் பட்ட பாடுகளும் சொல்லப்படுகின்றன. வாசிப்புச் சுவைக்காக நிகழ்வுகளைத் திரிபுபடுத்தல், வெற்றுப் புலம்பல், பக்கம் சாய்தல் எதுவுமே இல்லாமல், நிகழ்ந்தவை நிகழ்ந்தவையாகவே முல்லைக் கமலால் இந்நாவலில் பதியப்பட்டுள்ளன. இக்கதைசொல்லியிடம் மொழியாளுமை சிறப்பாகக் கைகூடியிருக்கிறது. கதை மாந்தர்கள் எம்மோடு வாழ்ந்தவர்களாக வாழ்பவர்களாக இருக்கிறார்கள். இக்கதை மாந்தர்களின் மனநிலையை வாசகரால் தெளிவாகவே உணர முடிகிறது. ‘மனமும் மனதின் பாடலும்’ என்ற கவிதைத் தொகுதியை 1999இல் எமக்களித்த ஆசிரியரின் முதல் நாவல் இது. ஜீவநதி வெளியீட்டகத்தின் 348ஆவது நூலாக வெளிவந்துள்ளது.