க.கணேசலிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
226 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-83-2.
கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் (கவிகலி), அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்து வருகின்றார். சமூக அக்கறையும் மக்கள் மீதான கரிசனையும் கொண்ட மனிதராக, படைப்பாளியாக திகழ்பவர். இரண்டு கவிதைத் தொகுதிகள் வாயிலாக இலக்கிய உலகிற்கு நன்கு பரிச்சயமானவர். மண்வாசனை கமழும் சொற்களை தன் படைப்பு மொழியாகக் கொண்டவர். இந்நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக புலம் பெயர்ந்து சென்ற மனிதர்களின் கதையாக இந்நாவல் பரிணமித்துள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 377ஆவது நூலாக வெளிவந்துள்ளது.