17744 இனிய மனங்கள் இணையும்போது.

தமிழினி (இயற்பெயர்: திருமதி டெய்சி தர்மராணி ஹென்ஸ்மன்). கனடா: திருமதி டெய்சி தர்மராணி ஹென்ஸ்மன், 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xv, 235 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. 6601-30-0.

‘இனிய மனங்கள் இணையும் போது’ என்ற இந்நாவல், முன்னர் கனடா பொ.தயாபரனின் ‘சிறகு’ பத்திரிகையில் இரு ஆண்டுகளாகத் தொடர்கதையாக வெளிவந்தது. இப்போது தனி நூலாகப் பிரசுரமாகியுள்ளது. திருமதி டெய்சி தர்மராணி ஹென்ஸ்மன் யாழ்ப்பாண மாவட்டத்தில், உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவர். 30.06.1935 அன்று பிறந்த இவர் உடுவில் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளுள் ஒருவர். இலங்கை தபால் தந்தி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னாளில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பின் கனடா தமிழ் திருச்சபையில்  Deacon, Secretary of the Council, Director of Women’s Ministry ஆக சேவையாற்றினார். இது இவரது முதலாவது நாவலாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 91911).

ஏனைய பதிவுகள்

17846 நவீன கவிதை காலாவதியாகி விட்டது.

றியாஸ் குரானா. தமிழ்நாடு: புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப் பட்டணம், கிருஷ்ணகிரி மாவட்டம் 635 112, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (தமிழ்நாடு: கனிக்ஸ் பிரின்டர்ஸ், கிருஷ்ணகிரி). 241 பக்கம், விலை: