17746 உட்துறைமுகம்.

வி.கௌரிபாலன். கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜீ.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை: ஜோதி என்டர்பிரைஸஸ்).

326 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ.

அகமும் புறமும் இழந்து, தன்னை மறந்து நிற்கும் தற்கால ஈழச் சமூகத்தில் மறக்கப்பட்டு வரும் ஒரு போராட்டத்தில், பன்முகம் கொண்ட ஒரு சிறு நகரத்தில், தனியொருவனுக்கு நேர்ந்த அவலத்தை எதிர்கொண்டு தமிழ்க் கரையில் அமைந்திருக்கிறது உட்துறைமுகம். கௌரிபாலன் திருக்கோணமலையில், உப்புவெளி கிராமத்தில் 20.03.1970இல் பிறந்தவர். 1977 முதல் 1983வரை உப்புவெளியில் உள்ள மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்டார். 1986 முதல் 1988 வரை தன் இடைநிலைக் கல்வியை திருக்கோணமலை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் இந்துக் கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 1989 இல் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்த இவர் அங்கு கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படவரைஞர் துறையில் பயின்று, 1992 முதல் 2000 வரை திருக்கோணமலை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் படவரை கலைஞராக னுசயகவஅயெ பணியாற்றினார். தற்போது மட்டக்களப்பு, வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச சபையின் பதில் செயலாளராக கடமையாற்றி வருகிறார். இவரது முதல் சிறுகதை ‘தாயம்மா’ என்ற தலைப்பில் 1994இல் தினமுரசு இதழில் வெளியானது. இவரது முன்னைய நூல்கள் ‘ஒப்பனை நிழல்” (சிறுகதைத் தொகுப்பு, 2003), ‘வானுறையும் தெய்வத்தினுள்” (நாடக நூல், 2003), ‘நதிப்பாதையின் மேலே’ (கட்டுரைத் தொகுப்பு, 2010), ‘பறப்பிழந்த வண்ணாத்திப் பூச்சிகள்’ (நாடகத் தொகுப்பு, 2012), ‘காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல்’ (சிறுகதைத் தொகுப்பு, 2016) ஆகியனவாகும்.  (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 107453).

ஏனைய பதிவுகள்

Spielbank Erreichbar

Content Was auch immer Spitze Alternativen Von Merkur Was auch immer Führung Verbunden Spielbank: Sogar In Diesem Smartphone Der Amüsement Die gesamtheit Vorhut Angeschlossen Casino