நிதனி பிரபு. வவுனியா: நிதனி பிரபு பதிப்பகம், 36, பிரதான வீதி, மகாறம்பைக்குளம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (சென்னை 17: வேதா என்டர்பிரைசஸ்).
232 பக்கம், விலை: இந்திய ரூபா 230., அளவு: 17.5×12 சமீ.
ஆசிரியரின் இருபதாவது நாவல். நிதனி பிரபு கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தான் சார்ந்த அப்பிரதேசத்தில் ஒரு பேச்சுத் திருமணம் (Proposed Marriage) எவ்வாறு முற்றாகின்றது என்பதை, இன்றைய காலத்தின் இளம் வயதினரின் திருமண வாழ்வு என்கிற கற்பனைக் கருவில் இணைத்துச் சொல்லியிருக்கிறார். இந்நாவலிலும் ஒரு பெண் தன் வாழ்க்கையில் போராடி, விட்டுக்கொடுத்து, அழுத்திப் பிடித்து, எப்படி வெற்றிநடை போடுகின்றாள் என்று காட்டியிருக்கிறார். சத்தமே இல்லாமல் அமைதியாகவிருந்து, நமக்கானதை நாம் பெற்றுக்கொள்வது கூட சாதுர்யம் மிகுந்த செய்கை தான் என்பதை பிரியந்தினி என்ற பாத்திர வார்ப்பின் ஊடாக விளக்குகின்றார்.