வ.அ.இராசரத்தினம் (மூலம்), பாஸ்கரன் சுமன் (பதிப்பும் விமர்சனமும்). கொழும்பு 6: புனைவகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 128 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0350-19-3.
திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய கிராமமான ஆலங்கேணிக் கிராமம் முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டுமாயின், அதனைச் சாத்தியப்படுத்தக்கூடிய கல்வியில் முன்னேற்றம் காணவேண்டும் என்பதை இந்நாவல் பிரதானப்படுத்துகின்றது. தலைமையாசிரியர் சின்னத்தம்பி, தாமோதரம், சௌந்தரம் ஆகிய பாத்திரங்களை மையப்படுத்தி கல்வியின் முக்கியத்துவம் இந்நாவலில் பேசப்பட்டுள்ளது. இந்நூலில் ‘ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது’ என்ற நாவலுடன் இந்நாவல் தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்மொழித்துறை விரிவுரையாளர் பாஸ்கரன் சுமன் அவர்கள் வழங்கிய விமர்சனமும் இடம்பெற்றுள்ளது.