இராமகுட்டி கிருஷ்ணபிள்ளை (புனைபெயர்: இராகி), மட்டக்களப்பு: கணேஸ்வரி நிறுவகம், காரைதீவு-05, 1வது பதிப்பு, ஜுன் 2020. (சாய்ந்தமருது: ரோயல் அச்சகம்).
v, 123 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-95007-0-9.
இலக்கிய உலகில் ‘இராகி’ என அறியப்பட்ட ஓய்வு நிலை அதிபர் அமரர் இரா.கிருஷ்ணபிள்ளை பாண்டிருப்பை பிறப்பிடமாகவும்; காரைதீவை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் காரைதீவின் கலை கலாசாரங்களுடன் ஒன்றித்து பணியாற்றிய ஆசிரியராவார். ஆசிரியராக கடமையாற்றிய வேளை மாணவர்களுக்கு கலை நயத்துடன் பாடங்களை புகட்டும் ஓர் தனிச்சிறப்பு கொண்டவர். அர்ப்பணிப்பான ஆசிரிய சேவையுடன், பாடசாலை வளர்ச்சி கலை நிகழ்வுகள் என்பவற்றிற்கும் மெருகூட்டியவர். காரைதீவு கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்க தலைவராக, சிக்கனக்கடன் கூட்டுறவு சங்கத்தின் பொருளாளராக, சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் முக்கிய உறுப்பினராக, காரைதீவு பிரதேச செயலக கலாசார பேரவை ஆலோசகராக, இந்து சமய விருத்தி சங்க ஆலோசகராக, கம்பன் கலைக் கழக ஸ்தாபகராக என பலதரப்பட்ட தளங்களில் நின்று செயற்பட்டு வந்திருந்தார். அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் ஆலோசகராகவும் இவர் செயற்பட்டார். அம்பாறை மாவட்ட சிறுகதை போட்டியில் முதலிடம் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றவர். சிறந்த சமூக சேவையாளரான இராகி ‘உறவுகள்’ என்ற சிறுகதைத் தொகுதியை முதல் படைப்பாக பிந்திய காலத்தில் வெளியிட்டார். ‘உறவுகள்’ சிறுகதை தொகுதி, ‘இராகியின் கவிதைகள்’, ‘ஆன்மிகமும் விழுமியங்களும்’ கட்டுரைத் தொகுதி, ‘பகையால் உதயமான உறவு’ நாடகம், ’அந்த ஒரு நிமிடம்’ சிறுகதைத் தொகுதி, ‘என்னில் பனித்த துளிகள்’ கவிதைத் தொகுதி, ‘நான் நீயானால்’ குறுநாவல், ‘பாடித்திரிந்த பறவை’ நாவல், ‘தெய்வதரிசனம்’ கவிதைத் தொகுதி என்பன உள்ளிட்ட பல காத்திரமான நூல்களை தந்தவர்.