அ.முத்துலிங்கம். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2023. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B தாசன் வீதி, தேனாம்பேட்டை).
174 பக்கம், விலை: இந்திய ரூபா 220., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-19034-23-9.
போரின் நிமித்தம் புலம்பெயர்ந்து அகதியாகப் பல நாடுகள் கடந்து கடைசியில் கனடாவில் தஞ்சமடையும் பத்தொன்பதே வயதான நிஷாந் என்னும் இளைஞனின் பார்வையில் விரியும் இந்நாவல் உலகெங்கிலும் அலைவுறும் மனிதர்களின் வாழ்க்கையைக் கழிவிரக்கமற்ற மெல்லிய நகையுணர்வுடன், தீவிரத்துடன் முன்வைக்கிறது. சந்திரா மாமி, சகுந்தலா, ஈஸ்வரி, அம்பிகாபதி, அகல்யா என ஒவ்வொருவராக நிஷாந்தின் மன அறைக்குள் வந்து தங்கி அவரவர் கதைகளைக் கூறி மறைகின்றனர். எவ்வளவு துயரிலும் நிஷாந்துக்குக் காதலிக்கின்ற மனநிலை வாய்க்கின்றது. நாவலெங்கும் கடவுச்சீட்டு ஒரு கதாபாத்திரமாகவே சுற்றிச் சுழல்கின்றது. அ.முத்துலிங்கம், யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையின் பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) படிப்பையும், இங்கிலாந்தின் பட்டய நிர்வாகத்துறை (Chartered Management) படிப்பையும் பூர்த்திசெய்தவர். இலங்கையிலும் ஆபிரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிலும் பணியாற்றியவர். தற்போது கனடாவில் குடும்பத்தினருடன் வாழ்ந்துவருகிறார்.