17760 கண்டிய நடனக்காரி நிமலாவதி.

பொன்.குலேந்திரன். கனடா: பொன்.குலேந்திரன், 1வது பதிப்பு, ஜூன் 2021. (கனடா:  மின்னூல் வெளியீடு).

(66) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

இந்நாவல் இரு தேசங்களின் வேறுபட்ட இரு நடனக் கலைஞர்களிடையே ஏற்படும் காதல் பற்றியதாகும். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட காதலர்களான இருவரில் காதலன் பிறப்பால் லண்டன் வாழ் இலங்கைத் தமிழன். அவனது காதலி சிங்கள இனத்தின் ஒதுக்கப்பட்ட சமூகமாகக் கருதப்படும் ‘ரொடியோ” இனத்தைச் சேர்ந்தவள். நடனமும் இசையும் இருவரையும் ஒன்று சேர்க்கின்றன. இவர்களது இனம் கடந்த காதலால் இருவரின் குடும்பங்களுக்கிடையே எழும் பிரச்சினைகளே நாவலை நகர்த்திச் செல்கின்றன. இந்நாவல் சுழிபுரம், டாக்டர் முருகவேல், கார்த்திகேயன், லண்டன் பல்கலைக்கழகம், முனைவர் எமிலி, துருவன், முருக பவனம், கடிதம், மரணவீடு, பறையர் குழு, மட்டக்களப்பு, கண்டி எசல பெரஹர, நிமலாவதி, காதல், திருமணம், கலைக் கல்லூரி ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. பொன்.குலேந்திரன் (பொன்னம்பலம் குலேந்திரன்) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதிகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி பின்னர் துபாய், அபுதாபி, சார்ஜா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலைத் தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவர். பின்னர் கனடா ‘டெலஸ்’ தொலை தொடர்பு ஸ்தாபனத்தில சிரேஷ்ட முகாமையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர். கனடாவை மையப்படுத்தி வெளிவந்த ‘குவியம்’ என்ற இணையத்தள சஞ்சிகையை நடத்தியவர். பீல் மிசிசாகா முது தமிழர் சங்கத்தில் ஐந்து வருடங்கள் தலைவராக இருந்தவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 86482).

ஏனைய பதிவுகள்

10 parasta uusinta online-kasinoa oikealla rahalla vuonna 2024

Nämä oikean rahan live-jakajakasinopelit jättävät sinulle valinnan pois mahdollisuuksista sen suhteen https://suomi-casinos.com/slotty-vegas-kasino/ , minkälaista web-pohjaista pokeria haluat kokeilla järkevästi parhailla live-agenttikasinoilla. Jos haluat vaihtoehtoisesti pelata