17761 கண்ணீரில் கரைந்த தேசம் (நாவல்).

முருகையா சதீஸ். ஜேர்மனி: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, ஆனி 2022. (யாழ்ப்பாணம்: ஹரிஸ் பிரின்டர்ஸ், சேர்.பொன் இராமநாதன் வீதி, திருநெல்வேலி).

x, 135 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-99407-0-3.

முருகையா சதீஸ் (கவிஞர் முல்லை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். போர்க்களப் பட்டறிவு எழுத்துருவாக இந்நாவல் அமைந்துள்ளது. ஆசிரியரே கதைமாந்தனாக நின்று நாவலின் கதையை நடத்திச் செல்கிறார். இது ஆசிரியரின் நேரடி அனுபவம் மலிந்ததாக அமைகின்றது. வன்னிப்போரின் குறுக்கு வெட்டுமுகத்தை இந்நாவல் பிரதிபலிக்கின்றது. இலங்கையில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இடையே  வன்னிப் பிரதேசத்தில் நடைபெற்ற போரின் முடிவுப் பகுதியைச் சித்திரிப்பதாக இந்நாவல் அமைகின்றது. புதுக்குடியிருப்பிலிருந்து உயிர்ப்பாதுகாப்புக்காகப் பல்வேறு இடங்களில் பல இன்னல்களுக்கும் குண்டுகளுக்கும் தப்பி வட்டுவாகல் பாலத்தைத் தாண்டும் வரையான களத்தினையும் காலத்தினையும் கொண்டதாக இது அமைகின்றது. உலகிலே போர்கள் நடைபெற்ற நாடுகளில் அப்போர்கள் தொடர்பான பல நாவல்கள் தோன்றியிருப்பதை நாம் அறிவோம். அத்தகைய ஒரு நாவலாக இதுவும் அமைகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 115503).

ஏனைய பதிவுகள்