ரோசி கஜன். சென்னை 61: ஸ்ரீ பதிப்பகம்;, புதிய எண். 17, பழைய எண் 16, ஸ்டேட் பாங்க் காலனி விரிவு, 2வது பிரதான சாலை, நங்கநல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (சென்னை: வேதா என்டர்பிரைசஸ்).
464 பக்கம், விலை: இந்திய ரூபா 420., அளவு: 18×12.5 சமீ.
ரோசி கஜன் எழுதிய 21ஆவது நாவல் இது. கயல்விழி தன் கையே தனக்குதவி என்றிருப்பவள். மனஉறுதியும் துணிச்சலும் மிக்கவள். தான் பெற்ற இந்த ஒற்றை வாழ்வை தனக்குப் பிடித்த வகையில் சுதந்திரமாக வாழ்ந்து பார்க்க நினைப்பவள். தனது தொழில் விடயமாக நியூயோர்க் செல்லும் கயல்விழி அங்கு சந்திக்கப்போகும் மனிதர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்பன அவளது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களே இக்கதையை நகர்த்திச் செல்கின்றன. மூன்றரை வருட கால இடைவெளியில் நகர்ந்து செல்லும் விறுவிறுப்பான கதையம்சம் இந்நாவலை சுவாரஸ்யமாக்குகின்றது.